Free Counters

Tuesday, December 13, 2011

பிரேஸ்வெல் "வேகத்தில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா * நியூசிலாந்து "திரில் வெற்றி



ஹோபர்ட்: ஹோபர்ட் டெஸ்டில் பிரேஸ்வெலின் அசத்தல் பந்துவீச்சு கைகொடுக்க, நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் "திரில் வெற்றி பெற்றது. வார்னர் சதம் அடித்தும் ஆஸ்திரேலியாவின் வாய்ப்பு நழுவியது. 
ஆஸ்திரேலியா சென்ற நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஹோபர்ட் நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 150, ஆஸ்திரேலியா 136 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 226 ரன்கள் எடுத்தது. பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்திருந்தது. 
மிரட்டல் பந்துவீச்சு:
நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணியின் வார்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து எளிதான வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நியூசிலாந்தின் இளம் பவுலர் பிரேஸ்வெல், நிலைமையை தலைகீழாக மாற்றினார். இவரது "வேகத்தில் பாண்டிங்(16), கேப்டன் மைக்கேல் கிளார்க்(0), மைக்கேல் ஹசி(0) ஆகிய முன்னணி வீரர்கள் அவுட்டாகினர். போராடிய வார்னர் சதம் அடித்தார். "டெயிலெண்டர்களையும் வெளியேற்றிய பிரேஸ்வெல், நியூசிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார். இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, பரிதாப தோல்வியை சந்தித்தது. வார்னர் (123*) அவுட்டாகாமல் இருந்தார். 
நியூசிலாந்து சார்பில் பிரேஸ்வெல் 6 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து டெஸ்ட் தொடர் 1-1 என "டிரா ஆனது.
-------
21 வயது வீரர்
நியூசிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல், 21, கிரிக்கெட் பாரம்பரிமிக்க குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை பிரண்டன் பிரேஸ்வெல், நியூசிலாந்து அணிக்காக ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக கடந்த 1985ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த அணியில் பிரேஸ்வெல் உறவினர் ஜான் பிரேஸ்வெல் இடம் பெற்றிருந்தார். 
கிறிஸ்துமஸ் பரிசு
இது குறித்து நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர் கூறுகையில்,""இவ்வெற்றி மூலம் நியூசிலாந்து மக்களுக்கு முன்னதாகவே கிறிஸ்துமஸ் பரிசு அளித்துள்ளோம். டேவிட் வார்னர் சதம் அடித்த போது, எனக்கு மாரடைப்பு வந்துவிடுவது போல் இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு 40 ரன்கள் தேவை என்ற நிலையில் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. இதனால் எப்படியும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தது, என்றார்.

ஆடு, மாடு திட்டத்தில் பெரும் ஊழல்!



""டீசல் திருட்டு அமோகமா நடக்கறது ஓய்...'' என்று சொல்லியபடியே பெஞ்சில் வந்து அமர்ந்தார் குப்பண்ணா.
""எங்க நடக்குதுன்னு விவரமா சொல்லு வே...'' எனக் கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
""மதுரை மாநகராட்சி வாகனங்களுக்கு குறிப்பிட்ட, "பங்க்'கில் இருந்து டீசல் நிரப்பிட்டிருக்கா ஓய்... வாகனங்களுக்கு ஒதுக்கீடு செய்ற டீசலை, டிரைவர்கள் சிலர் வெளியில வித்து, காசு பார்த்துண்டு இருக்கா... முன்பெல்லாம், மாநகராட்சி வாகனங்கள்ள டீசலை நிரப்பிட்டு, வாகனத்தை வெளியில் கொண்டு வந்து டீசலை எடுத்து வித்திட்டு இருந்தா...
""இப்ப, திருட்டுத்தனமா டீசல் வாங்கிறவாளோட வாகனத்தை, "பங்கிற்கு' எடுத்து வந்து நேரடியாவே டீசல் போட ஆரம்பிச்சிருக்கா... இந்த டீசல் திருட்டு காரணமா மாநகராட்சி டிரைவர்களின் பாக்கெட் நிரம்பி வழியறதாம்... இது சம்பந்தமா மேயரின் கவனத்துக்கு கொண்டு போன அலுவலர்கள் சிலர், என்ன நடவடிக்கை வரப்போறதுன்னு எதிர்பார்த்துண்டு இருக்கா...'' என்றார் குப்பண்ணா.
""ஆடு, மாடு வழங்கும் திட்டத்தில முறைகேடு நடக்கிறதா குற்றச்சாட்டு எழுந்திருக்குங்க...'' என்று அடுத்த 
மேட்டரில் நுழைந்தார் அந்தோணிசாமி.
""ஆடு, மாடு வாங்காம பணத்தை சுருட்டுறாங்களா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
""கரெக்டா சொன்னீங்க... தேனி மாவட்டத்தில விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டத்தில பயனாளிகளை தேர்வு செய்றதில அதிக அளவில முறைகேடு நடந்திருக்குங்க... ஒரு கட்டத்தில, அ.தி.மு.க., நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தற அளவுக்கு பொதுமக்கள் ஆவேசமாயிட்டாங்க...
""உண்மையிலேயே கஷ்டப்படறவங்களை பயனாளிகளா சேர்க்காம, புரோக்கர்கள் கை காட்டற ஆளுக்கு, ஆடு, மாடு வாங்க, "செக்' கொடுத்திருக்காங்க... 
இதனால, திட்டத்தின் நோக்கமே மாறிடிச்சுன்னு நேர்மையான அதிகாரிகள் வருத்தப்படறாங்க... வேறு பல மாவட்டங்களிலும் இதே நிலை தான் இருக்காம்ங்க...'' என்றார் அந்தோணிசாமி.
""அடுத்த மாதம் அ.தி.மு.க., பொதுக்குழு கூடுதாம் வே...'' என அடுத்த தகவலுக்கு தாவினார் அண்ணாச்சி.
""அதுல ஏதும் புது தகவல் உண்டா பா..'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
""கடந்த பொதுக்குழுக் கூட்டம் நடக்கும் போது, அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்துச்சு... அதில, ஜெயலலிதா பேசும் போது, "பொதுக்குழு உறுப்பினர்கள் சிலரை பேச வைக்கவில்லைன்னு யாரும் வருத்தப்பட வேண்டாம்...பத்திரிகையா
ளர்கள், மாற்றுக் கட்சிக்காரங்க எல்லாரும் உள்ளே நுழைஞ்சு விடுறாங்க... அடுத்த பொதுக்குழு நடத்தும் போது நம்ம ஆட்சி வந்துடும்... அந்தப் பொதுக்குழுக் கூட்டத்தை பாதுகாப்பாக நடத்தி, கட்சியினரை மனம் விட்டு பேச வைப்போமுன்னு' உறுதி அளிச்சாங்களாம்...
""தற்போது ஆளுங்கட்சியாக இருக்கிறதுனால, கட்சியினரை மனம் விட்டு பேச வைச்சு, பொதுக்குழுவை, மாநாடு மாதிரி நடத்த முடிவு செய்திருக்காங்களாம் வே...'' என்று சொல்லி விவாதத்தை நிறைவு செய்தார் அண்ணாச்சி; பெஞ்ச் அமைதியானது.
from : http://www.dinamalar.com

Saturday, December 10, 2011

2011.12.10 HotHotWorldCurrentBreakingNews


CNN's "Impact Your World" Features
Carter Center Trachoma Control Program
August 5, 2009


Trachoma is the world's leading cause of "preventable" blindness, yet it costs 10 million people their eyesight.  The Carter Center, with partner organizations and community health workers in six African nations, is working to carry out simple solutions to prevent this disease affecting the world's poorest and most forgotten people.

Click video player to watch CNN's coverage of this pioneering effort in Ethiopia.

Storm-hit North Sea oil vessels now 'safe'

Colour satellite image of storm. Pic: data we received from the AquaOne of the vessels lost five of its ten anchors as the storm swept across the North Sea
Two linked oil vessels which suffered anchor damage in severe storms have been reported to be "stable and safe" by their operators.
Licence holder CNR International said they hoped to get a permanent fix for the anchors today (Saturday).
A specialist anchor-handling vessel has been brought alongside and four others have been mobilised to assist.
All 67 crew on board the two vessels are safe. The UK government said the situation was "low risk".
The Petrojarl Banff, which has 4,400 tonnes of crude oil on board, lost tension in five of its 10 anchors and drifted up to 250m.
It is a floating production storage and offloading vessel.
The Apollo Spirit, with 96,300 tonnes of oil, lost tension in one of its eight anchors but remained secure.
There has been no report of pollution at the site, 190km east of Aberdeen.
The Scottish government said it was monitoring the situation and was being kept fully informed.




Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Walgreens Printable Coupons