Free Counters

Tuesday, December 13, 2011

பிரேஸ்வெல் "வேகத்தில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா * நியூசிலாந்து "திரில் வெற்றி



ஹோபர்ட்: ஹோபர்ட் டெஸ்டில் பிரேஸ்வெலின் அசத்தல் பந்துவீச்சு கைகொடுக்க, நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் "திரில் வெற்றி பெற்றது. வார்னர் சதம் அடித்தும் ஆஸ்திரேலியாவின் வாய்ப்பு நழுவியது. 
ஆஸ்திரேலியா சென்ற நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஹோபர்ட் நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 150, ஆஸ்திரேலியா 136 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 226 ரன்கள் எடுத்தது. பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்திருந்தது. 
மிரட்டல் பந்துவீச்சு:
நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணியின் வார்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து எளிதான வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நியூசிலாந்தின் இளம் பவுலர் பிரேஸ்வெல், நிலைமையை தலைகீழாக மாற்றினார். இவரது "வேகத்தில் பாண்டிங்(16), கேப்டன் மைக்கேல் கிளார்க்(0), மைக்கேல் ஹசி(0) ஆகிய முன்னணி வீரர்கள் அவுட்டாகினர். போராடிய வார்னர் சதம் அடித்தார். "டெயிலெண்டர்களையும் வெளியேற்றிய பிரேஸ்வெல், நியூசிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார். இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, பரிதாப தோல்வியை சந்தித்தது. வார்னர் (123*) அவுட்டாகாமல் இருந்தார். 
நியூசிலாந்து சார்பில் பிரேஸ்வெல் 6 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து டெஸ்ட் தொடர் 1-1 என "டிரா ஆனது.
-------
21 வயது வீரர்
நியூசிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல், 21, கிரிக்கெட் பாரம்பரிமிக்க குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை பிரண்டன் பிரேஸ்வெல், நியூசிலாந்து அணிக்காக ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக கடந்த 1985ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த அணியில் பிரேஸ்வெல் உறவினர் ஜான் பிரேஸ்வெல் இடம் பெற்றிருந்தார். 
கிறிஸ்துமஸ் பரிசு
இது குறித்து நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர் கூறுகையில்,""இவ்வெற்றி மூலம் நியூசிலாந்து மக்களுக்கு முன்னதாகவே கிறிஸ்துமஸ் பரிசு அளித்துள்ளோம். டேவிட் வார்னர் சதம் அடித்த போது, எனக்கு மாரடைப்பு வந்துவிடுவது போல் இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு 40 ரன்கள் தேவை என்ற நிலையில் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. இதனால் எப்படியும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தது, என்றார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Walgreens Printable Coupons